பிரதான செய்திகள்

ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ரணிலுக்குப் பின்னால் உள்ளனர்: ரிஷாட் எம்.பி தெரிவிப்பு

அரசியல் அனுபவமில்லாத கோட்டாபாய ராஜபக்ஷவிடம் நாட்டைக் கொடுத்ததால்தான் இந்த நாடு நாசமாகியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றpய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 

நாடு இருக்கும் இக்கட்டான நிலையில் இன்னொருவரிடத்தில் இந்த நாட்டைக் கொடுத்து கட்டியெழுப்ப முடியாது. மீண்டும் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல வருடங்கள் தேவையாகவுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு அரசியல்வாதி. அவர் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். 


சஜித் பிரமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் பல்வேறு சேவைகளைச் செய்துள்ளார். எனவே, உங்களது வாக்குகளை சீரழிக்காமல் சஜீத் பிரமதாசவுக்கு வழங்குங்கள்.

 

நாட்டில் மாற்றம் தேவை என்று சிலர் நினைத்துக்கொண்டு சிவப்புக் கட்சிக்குப் பின்னால் அலைந்து திரிகின்றார்கள். ஊழல்களை ஒழிப்போம், கள்வர்களைப் பிடிப்போம் என்று சொல்லும் சிவப்புக் கட்சிக்காரர்கள் ஏன் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நடக்கும் அநீதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

 

கொரோனா ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்கள், கை உயர்த்தியவர்கள் எல்லோரும் ரணிலுக்கு வாக்களிக்க ஒன்றிணைந்திருக்கிறார்கள். கோட்டாவுக்கு பக்கபலமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ரணிலுக்கு பின்னால் திரிகிறார்கள். எனவேஇ ரணிலுக்கும் அநுரவுக்கும் வாக்களித்து விடாதீர்கள். 


நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு திட்டங்களை செய்துள்ள சஜித்தை எல்லோருமாக சேர்ந்து தோக்கடிக்கப் பார்க்கிறார்கள். எனவே அந்த சதியில் சிக்கிவிடாமல் அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரமதாசவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment