பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களை கிழக்குப் பாடசாலைகளில் நியமிக்கவும் - மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர்



தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணமான  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் முன்னாள் அமைச்சர் சுபையிர் நேற்று (24) கொழும்பில்  இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத்சாலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில், வேறு மாகாணப் பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்துள்ளமை கவலையான விடயமாகும். இதுதொடர்பில் குறித்த ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கமைவாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்து வெளி மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருடன் கொழும்பு சென்ற முன்னாள் அமைச்சர் சுபையிர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத்சாலியினையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில்  ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment