சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி விடயத்தில் எந்தத்தடைகள் வந்தாலும் அவைகளை தகத்தெறிந்து எனது அரசியல் அதிகாரத்தின் ஊடாக சேவையாற்றுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.
காபட் வீதியாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட சம்மாந்துறை அலவக்கரை வீதி திறப்பு விழா நிகழ்வின் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எனது அரசியல் அதிகாரத்தினூடாக சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளேன். இதனை சம்மாந்துறை பிரதேச மக்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாது. குறிப்பாக அலவக்கரை வீதி காபட் இடல் மற்றும் மலையடிக்கிராமம் உட்பட பல கிராமங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் செய்துள்ளேன்.
மேலும் அல்-மர்ஜான் பாடசாலையை பெணகள் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த மண்ணில் பல தொழில் வாய்ப்புக்கள், இடமாற்றங்கள் என பல்வேறு பணிகளையும் செய்துள்ளேன் அதேபோன்று சம்மாந்துறை வைத்தியசாலை, பிரதேச சபை என்பவற்றை தரமுயர்த்தவும் என்னியுள்ளேன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் எனக்கெதிராக சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு சேறுபூசும் வகையில் சிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அலவக்கரை வீதி திறப்பு விழா அவசராமாக செய்ய வேண்டியதொரு நிலைக்கு தள்ளப்பட்டதால் விழாவில் எமது பிரதேச மக்களை அழைக்கும் பொருட்டு சுவரொட்டிகளை அச்சிட்டு எமது பிரதேசம் பூராகவும் எனது ஆதரவாலர்களினால் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டிகளுக்கு நாசகாரர்களினால் இரவோடுஇரவாக ஒயில் பூசப்பட்டுள்ளது. இதுகுறித்து வெட்கப்பட வேண்டியுள்ளது. இதனால் எமது மண்ணுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.
ஒன்று படுவோம், ஒற்றுமைப்படுவோம், ஐக்கியமாக எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம் எனும் வாசகங்களே அந்த சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தது. மேற்படி விடயங்களுக்கு எதிரானவர்களே இதனைச் செய்துள்ளார்கள் இவ்வாறான சில்லறைத்தனமான செயற்பாடுக்கு அஞ்சி எனது செயற்பாட்டை ஒருபோதும் நிறுத்தப்போவதுமில்லை. அரசியல் அதிகாரமுள்ள சிலரது இயலாமையினை மூடி மறைப்பதற்காகவே கேவலமான செயற்பாடுகள் எமது பிரதேசத்தில் அரங்கேற்றப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்.
சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி நலன் கருதி நான் செயற்படுகின்ற போது எதற்காக எனது போட்டோக்களுக்கு ஒயில் பூசப்படுகிறது. நான் இந்தப் பிரதேசத்திற்கு செய்த துரோகம்தான் என்ன? சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பவர்களே இவ்வாறான நாசகார வேலைகளைச் செய்துவருகின்றனர். இதனை யார் செய்தார்கள் என்பதனையும் மக்கள் அறிந்துள்ளனர். கற்ற மக்கள் அதிகமாக வாழும் எமது பிரதேசத்தில் இவ்வாறான கேவலமான செயற்பாடுகள் இடம்பெறுவதனை இனியும் அனுமதிக்க முடியாது.
அல்-மர்ஜான் பாடசாலையை தரமுயர்த்தும் பொருட்டு கிழக்கு மாகாண அனுமதியினை பெரும்பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தேன் அப்போது அவர் என்னையும், சம்மாந்துறை மண்ணையும் அவமானப்படுத்தும் வகையில் செயற்பட்டார். அத்தனை விடயங்களையும் இந்த மண்ணுக்காக தாங்கிக்கொண்டு வந்தேன் நான் எதிர்நோக்கிய சவால்கள் அனைத்தும் இந்த மண்ணுக்காகவே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment