(ஏ.எல்.றியாஸ்)
20வது திருத்த சட்டமூலத்தை பின்கதவால் நிறைவேற்றுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் 20வது திருத்த சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கும் பொருட்டு மூன்று தடைவ கிழக்கு மாகாண சபை அமர்வு கூட்டப்பட்டது.
இந்தச் சட்டமூலத்திற்கு பலத்த எதிர்ப்பு காணப்படுவதால் இதனை சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு கிழக்கு முதலமைச்சர் பின்கதவால் முயற்சி செய்துவருகிறார்.
குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிர ஆர்வம் காட்டிவரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தச்சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரித்திருந்தால் எப்போதே இதனை நிறைவேற்றியிருப்பார்கள். அவர்கள் எதிர்ப்பதனால் வேறுகட்சியினருடன் இன்று திரைமறைவில் பேசப்படுகிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சிறியதொரு அதிகாரத்தை நாம் ஒருபோதும் இழந்துவிட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை ஆதரித்து தமிழ் சமூகத்திற்கு ஒருபோதும் துரோகமிழைத்து விடக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தவிடயத்தை நிதானமாக கையாழுகின்ற சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனை நிறைவேற்றுவதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொள்கின்றமை கவலையான விடயமாகும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபையிர், டபள்யூ.டீ. வீரசிங்க, நாகலிங்கம் திரவியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment