பிரதான செய்திகள்

தாருன் நுஸ்ரா சிறுமியர் இல்லமும், சிந்திக்க வேண்டிய எமது சமூகமும்

(அபூ பின் நுபைத்)
கடந்த சில வருடங்களாக கண் வைத்தியர் டாக்டர் தாஹா மரீனா அவர்களால் நடாத்தப்பட்ட தாருன் நுஸ்ரா சிறுமியர் இல்லம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் இணையத்தளங்களிலும், சமூக தளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கின்ற இந்த வேளையில் நாம் சிந்திக்காத சமூகமாக இருப்பதில் என்ன அர்த்தமிருக்கின்றது.


சிறுவர் இல்லம் நடாத்துவது என்பது இலகுவான காரியமல்ல அதனை நம்மால் நடாத்த முடியாது விமர்சிப்பதே இலகுவான காரியம் ஒன்றாகும். இலங்கையில் பெண்களுக்கான சிறுமியர் இல்லங்கள் கிண்ணியா, கள்-எலிய, கண்டி, கிருலப்பனை, தெஹிவளை, அட்டுளுகம முதலான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சிறுமியர் இல்லங்கள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் இருக்கின்றமை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


இவ்வாறான சிறுவர் இல்லங்களில் எந்த அடிப்படையில் சிறுமியர்கள் இணைக்கப்படுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?

1. தாய், தந்தையை இழந்த அநாதைச் சிறுமிகள்
2. பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள்
3. பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சூழல் இருக்கின்ற பிள்ளைகள்
4. வீதியோரங்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பிள்ளைகள்
5. சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் பிள்ளைகள்


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இச்சிறுமிகளை யார் அனுமதித்தால் இந்த சிறுவர் இல்லத்தில் சேர்க்க முடியும் என்று தெரியுமா..?

1. நீதவான் நீதிமன்ற நீதிபதி
2. சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்


இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளை தொடர்ந்தும் குறித்த இல்லம் காணப்படும் பிரதேச நன்னடத்தை அலுவலகத்தினால் பரிசோதனை செய்து வருவதும் வழக்கமான கடமையாகும்.


இது இவ்வாறு இருக்கத்தக்க கடந்த காலங்களில் தாருன் நுஸ்ரா சிறுமியர் இல்லம் தொடர்பாக பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. எமது சமூகங்களுக்காக பொதுவாக பின்வரும் விடயங்களை முதலில் நாம் முன்வைக்க வேண்டியிருக்கின்றது.

01. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

02. நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது

03. “ஒருவருடைய மானம் இன்னொருவருக்கு அமானிதம்”

“நிச்சயமாக யாரெல்லாம்  முஃமினான மனிதர்களின் விசயத்தில்  மானக்கேடான விடயங்கள் பரவவேண்டும் என்று விரும்புகின்றார்களோ அந்த மனிதர்களுக்கு உலகத்திலும் தண்டனை இருக்கிறது மறுமையிலும் தண்டனை இருக்கின்றது  24:19”

04. கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல மாறாக இன்றுவரை அவர்கள் சந்தேக நபர்கள் என்பதனை நாம் ஞாபகத்தில் வைப்பதற்கு மறக்கவும் கூடாது.


இங்கு கூறப்படுவது போன்று குறித்த சிறுமிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியவர்கள்  

01. பொலிஸார்

02. சட்ட வைத்திய அதிகாரிகள்

03. நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்

04. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

மேலுள்ளவர்களைத் தவிர சமூகமாகிய எம்மால் அறிக்கை சமர்ப்பிக்க முடியுமா..? அல்லது எம் சமூகத்திற்கு எந்தளவிற்கு உண்மைத் தன்மை தெரியும். அவ்வாறு அல்லாஹ்வின் மீது சத்தியமாக யாருக்காவது உண்மைத் தன்மை தெரிந்தால் அவரே நீதிமன்றின் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி சாட்சி சொல்லலாமல்லவா..?


குறித்த சிறுமிகளின் வாய்மூல அறிக்கைகள்; மற்றும் மருத்துவ அறிக்கைகள், சிறுமிகளின் சம்பவத்திற்கு முன்னரான வரலாற்றுத் தாள்கள் என்பன ஆவணம் வடிவில் பாதுகாப்பாக இருக்கும் போது நாம் அவற்றைப் பற்றி பார்த்திருக்கின்றோமா..?


இல்லை இச்சிறுமிகள் அனுப்பிவைக்கப்பட்ட நன்னடத்தை அலுவலகங்களில் இப்பிள்ளைகள் அனுப்பப்பட்டமைக்கான காரணங்கள் இருக்கிறதே அவற்றைப் பற்றி அறிந்தவர்கள் எம்மில் எத்தனை பேர் இருக்கின்றனர்…?


இச்சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம் அவ்வாறு நடந்தால் ஏன் இச்சிறுமிகள் தொடர்ந்தும் இச்சிறுவர் இல்லங்களில் இருப்பதற்கு ஆசைப்படுகின்றார்கள்..? இல்லை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் சிறுமிகளை நம்மில் யாராவது விசாரித்திருக்கின்றோமா..?


சமூகம் அறிந்தவகையில் இச்சிறுமிகள் எல்லாம் அநாதைச் சிறுமிகள் என்றுதான் ஊடகங்கள் சொல்கின்ற ஆனால் இதிலிருந்த சிறுமிகளில் 30வீதமும் அநாதைச் சிறுமிகளாக இருந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மையும், யாதார்த்தமும்.


சட்டமும், நீதிமன்றமும்,  அரச திணைக்களங்கலும் பார்க்க வேண்டிய ஒரு வேலையை நம்மால் பார்க்க முடியுமா அல்லது நம்மால் தீர்க்க முடியுமா..? சட்டம் அதன் கடமையை சரியாகச் செய்யும், சட்டத்துறை சுயாதீனமாக இயங்குகின்றது, ஜனநாயகம் தற்போது நாட்டிலுள்ள போது சட்டமும், நீதிமன்றமும்,  அரச திணைக்களங்கலும் பார்க்க வேண்டிய ஒரு வேலைக்குள் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்.
இதனை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். குறிப்பாக இவ்வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றிலிருந்து சட்டமா அதிபர் மூலம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சென்றுதான் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

உண்மை எங்கோ இருக்கின்றது. அது அல்லாஹ்வுக்குத் தெரியும் சமூகமாகிய நமக்கு தெரியாது இந்தக் கூற்றை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சிறுமியர் இல்லம் நடாத்தும் போது வருமானம் இலட்சக் கணக்கிலோ அல்லது கோடிக் கணக்கிலோ வருவதும், பிற்காலத்தில் இல்ல நிருவாகிகளிடையே போட்டித்தன்மை, பொறாமை வருவதும் சிலர் பிரிவதும், எதிர்ப்பதும் தாருன்நுஸ்ராவில் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து இல்லங்களிலும்தான். பணத்திற்கு பதவிக்கும் ஆசைப்பட்டு இருந்த இல்லத்தையும் மூடவைத்து இன்னொரு இல்லம் திறப்பது இலகுவான காரியமா..?


டாக்டர் தாஹா மரீனா அவர்களால் நடாத்தப்பட்ட தாருன் நுஸ்ரா சிறுமியர் இல்லம் தொடர்பில் அவருடைய கருத்தை கொஞ்சம் சிந்திக்க வேண்டிய பொறுப்பும் நம்மில் எத்தனை பேருக்கு இருந்தது.




மேற்குறித்த கருத்தினை அவதானித்த விடத்து அவற்றையும் நாங்கள் இலகுவில் ஒதுக்கி விட முடியாது. உண்மையை நீதிமன்றம் சொல்லும், நம் பிள்ளைகள் (பாதிக்கப்பட்டதாக கருதும்) சொல்லுவார்கள் ஆகவே ஒரு பிரச்சினைக்கு ஒரு முடிவு வருவதற்கு முன்பு நாம் ஏன் முந்தியடித்துக்கொண்டு குழம்ப வேண்டும், குழப்ப வேண்டும்..? எங்களை யாரோ குளப்புகிறார்கள் என்பதுதான் உண்மை அவர்கள் ஏன் குழப்ப வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் நமக்குத் தெரியாது ஆனால் உண்மை அல்லாஹ்வுக்கு தெரியும் அவன் பெரியவன் உண்மையை அவன் நமக்கு விரைவாக வெளியாக்கட்டும்.

ஆகவே இக்கட்டுரையின் இறுதி முடிவும் நோக்கமும் இதுதான்….

01. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். யாராகவிருந்தாலும்

02. நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது யாராகவிருந்தாலும்

03. “ஒருவருடைய மானம் இன்னொருவருக்கு அமானிதம்”

04. “நிச்சயமாக யாரெல்லாம்  முஃமினான மனிதர்களின் விசயத்தில்  மானக்கேடான விடயங்கள் பரவவேண்டும் என்று விரும்புகின்றார்களோ அந்த மனிதர்களுக்கு உலகத்திலும் தண்டனை இருக்கிறது மறுமையிலும் தண்டனை இருக்கின்றது” (அல்குர்:ஆன்  24:19)

05. கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல மாறாக இன்றுவரை அவர்கள் சந்தேக நபர்கள்.

06. உண்மை கண்டறியப்பட வேண்டும். அனைவரும் திறந்த நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், திட்டமிட்டு செய்த குற்றமாக இருந்தாலும் திட்டமிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீதி வெல்ல வேண்டும். நியாயம் கிடைக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு எமது சமூகமும் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment