பிரதான செய்திகள்

பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் அம்பலம்

பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் அம்பலம் ஆகி இருக்கிறது. இந்த சதி திட்டத்தை தீட்டிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பிரிட்டனில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் என்று கூறப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

சக்காரியா ரகுமான், முகமது ஆகியுப் இம்ரான் என்ற அந்த இரண்டு நபர்களும் லண்டனை சேர்ந்தவர்கள். இவர்களிடம் போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளது.

அதன்படி அவர்கள் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரிட்டனில் இருக்கும் 'வெஸ்ட்மின்ஸ்டர்' நீதிமன்றம் வழியாக பிரதமர் வரும் போது அவர் வாகனத்தில் குண்டு வீச திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக குண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்து இருக்கின்றனர்.
தற்போது போலீசார் அந்த திட்டத்தை முறியடித்து இருக்கின்றனர். மேலும் அவர்களை தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment