(ரஹ்மான்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசை அட்டாளைச்சேனையில் பலப்படுத்துவதற்கு தொழிலதிபர் ஷஹில் முன்வந்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சரை சந்தித்த போது கட்சியில் இணைந்து செயற்படுவதற்கு சம்மதத்தை தெரிவித்து கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார்.,
எதிர்வரும் காலங்களில் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் அட்டாளைச்சேனை மக்களை இணைத்து செயற்படவுள்ளதாகவும் அவர் அமைச்சரிடம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மண்ணுக்கு அடிக்கடி நீங்கள் வரவேண்டும், அங்குள்ள இளைஞர்களுக்கு முடிந்தளவில் தொழில்வாய்ப்புக்களையும் வழங்க வேண்டும் குறிப்பாக அப்பிரதேச அபிவிருத்தியிலும் கூடிய கவனம் செலுத் வேண்டும் எனவும் சஹீல் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் கட்சிக்காக அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விசேட இளைஞர் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் நல்லதொரு படித்த கட்டமைக்கப்பட்ட புத்திஜீவிகள் உருவாக உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
எனது நண்பரும் கட்சியின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹீப் போன்றவர்கள் கட்சியில் முழுமையான அர்ப்பணிப்புடன் எதுவித தன்நலம் பாராமல் செயற்படுகின்றார். அவர்களைப் போல பலர் எமது கட்சியில் இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பலம் பொருந்திய நிலையில் கட்சி உருவாகும் எனவும் அமைச்சர் றிஷாட் பதியூத்தீன் மேலும் தெரிவித்தார்.
எதிர் காலத்தில் தேசிய ரீதியில் இளைஞர்களுக்கான புதுவகையான நவீன முறையில் அவர்களின் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் அவர்களை வழிநடத்த திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப், கட்சியின் அம்பாரை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான ஜுனைடீன் (மான்குட்டி), கட்சியின் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளர் அஷீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment