பிரதான செய்திகள்

"தோப்பாகிய தனிமரம்" மர்ஹூம் அஷ்ரஃப் நினைவேந்தல்


(பிறவ்ஸ்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தலைப்பில் எதிர்வரும் 16ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு பொத்துவில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாஸித் தலைமை தாங்குவார். இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

உமா வரதராஜன், எஸ்.எச். ஆதம்பாவா, எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி விசேட தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளனர். அத்துடன் அஷ்ரஃப் பற்றிய ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அஷ்ரஃபின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் நடைபெற்ற "அழகியதொனியில் அல்குர்ஆன்" போட்டியில் வெற்றிபெற்றவர்களின் மீள் அரங்கேற்றம் பிரமாண்டமான மேடையமைப்புடன் ஒலி, ஒளி நிகழ்வாக அன்றையதினம் மேடையேற்றப்படவுள்ளது. 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment