இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடம் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விடுத்த வேண்டுகோளுக்கினங்க ஹிரா பெளண்டேசனின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வரிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
குறித்த குடிநீர் இணைப்பினை வழங்கிவைக்கும் நிகழ்வு (06) புதன்கிழமை முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிபின் சாய்ந்தமருது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் குடிநீர் இணைப்புக்கான பத்திரத்தினை வழங்கி வைத்தார்.
கல்முனை மாநகர முதல்வராக இருந்த காலங்களில் வறிய மக்களை இனங்கண்டு அவர்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment