கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண சபை இன்று (7) விசேடமாக கூட்டப்பட்டது. இன்றைய தினம் குறித்த சட்டமூத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபை கூடுவதற்கு முன்னர் இன்று காலை நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது 20வது திருத்த சட்டமூலம் திருத்தத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அவ்வாறின்றி சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் சட்டமூலத்தை தோற்கடிப்போம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க முடியாதெனவும், அவ்வாறான விடயங்களை நீக்கி திருத்தத்துடன் 20வது திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
இச்சட்டமூத்திற்கு இந்த சட்டமூலத்திற்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாகவும் தேசிய காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மஹிந்த அணியினர் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சட்ட மூலத்தினை எப்படியோ நிறைவேற்றுவதற்கு பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

0 comments:
Post a Comment