புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அவசியம் இப்போது இல்லை. நாட்டை சீரழிக்கவும் பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தவுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முயற்சிக்குமாயின் அதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:
Post a Comment