பிரதான செய்திகள்

(வீடியோ) மக்கள் யாருடைய பக்கம் என்பதை அறிவதற்கே பள்ளிவாயல் தேர்தலில் குதித்துள்ளேன்: இஸ்மாயில் அதிபர்

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

பல விமர்சனங்களுக்கு மத்தியிலும்  அந்த விமர்சனங்கள் சரியா.? பிழையா.? என்பதற்கு அப்பால் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயலினை பத்தாண்டு காலங்கள் பொறுப்புடன் நிருவகித்திருப்பது என்பதனை சாதனையாகவே நான் பார்க்கின்றேன். 

ஆகவே இந்த பத்தாண்டுகள் கால எனது நிருவாகத்தினை வைத்து ஓட்டமாவடி பிரதேச மக்கள் எனக்கு என்ன பாடத்தினை புகுட்ட போகின்றார்கள் என்பதை அறிவதற்காகவே நான் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயலினுடைய புதிய நம்பிக்கையாளர் சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அதன் தற்போதைய செயலாளரும் , அதிபரும், பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான எம்.யூ.எம்.இஸ்மாயில் அதிபர் தெரிவிக்கின்றார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் பல வகையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்ற மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நிருவாகத்தினை பற்றியும் , இம்மாதம் 28ஆம் திகதி இடம் பெறவுள்ள புதிய நம்பிக்கையாளர் சபைக்கான தேர்தல்கள் பற்றியும் விளாவாரியாக வினவியபோதே பத்துவருடங்களாக குறித்த பள்ளிவயலில் செயலாளராகவும், விமர்சனங்களுக்கு உள்ளாகியும் உள்ள இஸ்மாயில் அதிபர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த தற்போதைய நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் இஸ்மாயில் அதிபர்…

புதிய நம்பிக்கையாளர் சபையினை தெரிவு செய்வதற்காக இம்முறை ஒரு புதிய முறையாகவும், இரகசிய தேர்தலாகவும் இடம்பெற உள்ளது. இதிலே ஒருவர் எத்தனை ஆண்டுகள் பதிவகித்தாலும் அவர் மீண்டும் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட இருக்கும் புதிய நிருவாகத்திலே கடமையாற்ற முடியும். குறித்த பிரதேசத்தில் உள்ள ஜமாத்தார்கள் எவராக இருந்தாலும் போட்டியிட முடியும். அந்த வகையிலே 83 பேர்கள் புதிய நம்பிக்கையாளர் சபைக்காக இம்முறை போட்டியிட உள்ளனர்.

அந்த வகையிலே நானும் வேட்பாளராக போட்டியிடுகின்றேன். குறிப்பாக நான் போட்டியிடுகின்றமைக்கு முக்கிய காரணம் எனது பத்தாண்டு கால நிருவாகத்தினை மக்கள் விமர்சிக்கின்றார்கள் என்ற கருத்துக்கள் பிரதேசத்தில் நிலவுகின்றமையாகும். அரசியல் ரீதியாக நான் கல்குடாவின் அரசியல் தலைமை பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ஆதரவாக செயற்படுபவன், செயலாற்றி கொண்டிருப்பவன்.  

அதனை மையமாக வைத்து அமீர் அலியின் அரசியலில் உள்ள எதிர் தரப்பினராலேயே பள்ளிவாயல் நிருவாகத்தினை பற்றியும், என்னை பற்றியும் விமர்சிக்கப்படுகின்றது. ஆகவே எங்கள் நிருவாகத்தின் மீது சுமர்த்தப்படுகின்ற விமர்சனங்களை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டுமே தவிர எங்களுடைய நிருவாக குறைபாடுகளாக கருதவும் முடியாது, கருதவும் கூடாது.

மேலும் பள்ளிவாயல் நிருவாகமானது அரசியல் தலையீட்டின் அடிப்படையில் நடை பெறுகின்றமை, ஊழல் நிறைந்தமையாக காணப்படல், பள்ளிவாயலுக்கு சொந்தமான விவசாய காணி செயலாளரினால் எதுவித வாடகையும் இல்லாமல் செய்கை பன்னப்படல், சீரான வரவு செலவு திட்ட கணக்கறிக்கைகள் ஜமாத்தாரின் பார்வைக்கு வெளிக்காட்டப்படாமல் இருந்தல், நிருவாகமானது தொடர்ந் தேர்ச்சியாக குறித்த பத்து வருடங்களில் கூடுதலான விமர்சனங்களுக்கு உள்ளாகியமை, தேர்தலானது எவ்வாறு நடை பெற போகின்றது, இந்த தேர்தலிலும் அரசியல் பின்னணிகள் தாக்கம் செலுத்துமா.? போன்ற முக்கிய பல கேள்களோடு இன்னும் பல கேள்விகளுக்கு ஓட்டமாவடி மொஹைதீன் ஜுமா பள்ளிவாயலின் செயலாளரும், வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளருமான எம்.யூ.எம்.இஸ்மாயில் அதிபர் தெரிவித்த பதில்களினுடைய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment