ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக மீண்டும் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் அன்றைய தினம் அவர்களுக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லாவிடின்இ அருகிலுள்ள தபாலகத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ இதுவரையில் 51 சதவீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்இ தமது கடமை நேரத்தில் அருகிலுள்ள தபால் அலுவலகத்துக்குச்சென்று தேசிய அடையாள அட்டையை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியமென சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment