பிரதான செய்திகள்

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் Paying ward அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்

(றியாஸ் ஆதம்)

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதுதொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று புதன்கிழமை (04) பொத்துவில் ஆதார வைத்தியசலையில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை சுற்றுலா அதிகார சபையின் உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகளான டொக்டர் நித்தின் ரணவக்க, டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பொறியியலாளர் ஏ.எம்.ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் Paying Ward வசதிகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகள் பெரிதும் நன்மையடைவதுடன், எமது நாட்டுக்கும் பெரும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு நிறுவனமாகவும் பொத்துவில் வைத்தியசாலை திகழும்.

இலங்கை சுற்றுலா அதிகார சபை குறித்த Paying ward வசதியினை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment