(ஆதம்)
பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் FIESTA-2024 இல்ல விளையாட்டுப் போட்டியில் ஹிக்மா இல்லம் 236 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவாகியது.
குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் அண்மையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டுக் கழங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
அதிகமான அங்கத்தவர்களை கொண்டுள்ள றை ஸ்டார் விளையாட்டுக் கழகம் அதன் அங்கத்தவர்களை மூன்று இல்லங்களாக (மின்ஹாஜ் ஸ்டார்ஸ், ஹிதாயா ஸ்டார்ஸ், ஹிக்மா ஸ்டார்ஸ்) பிரித்து இந்த விளையாட்டுப் போட்டியினை நடாத்தியது.
இதில் ஹிக்மா ஸ்டார்ஸ் இல்லம் 236 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், மின்ஹாஜ் ஸ்டார்ஸ் இல்லம் 225 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும், ஹிதாயா ஸ்டார்ஸ் இல்லம் 215 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
குறித்த விளையாட்டுப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாமிடங்களை பெற்ற இல்லங்கள், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள், றை ஸ்டார் கழகத்திலிருந்து பல்துறைகளிலும் சாதனைகளை வெளிப்படுத்தியோர் என பலரும் இந்நிகழ்வின் போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இல்ல விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டுக் கழகங்களினாலும் நடாத்த முடியும் என்பதனை நிருபித்துக்காட்டிய பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகம் திறமையான வீரர்களை இணங்கன்டு அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலே இந்த இல்ல விளையாட்டு போட்டியினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment