(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு இளைஞர் அமைப்பு மற்றும் மயோன் கல்வி அபிவிருத்தி அமைப்பு என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்த "சிறுவர் கல்வி வளர்ச்சிக்கு உரமூட்டுவோம் " எனும் தொனிப்பொருளில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச மீட்டல் கருத்தரங்கு மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் (19) இடம்பெற்றது.
கிழக்கு இளைஞர் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தானிஸ் றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மயோன் கல்வி அபிவிருத்தி அமைப்பின் தவிசாளர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இக் கருத்தரங்கில் ஆசிரியர்களான எம்.எச்.எம்.சதாத் மற்றும் எம்.ஐ.முறாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment