பிரதான செய்திகள்

மர்ஹும் எம்.ஏ.நஸீர் ஞாபகார்த்தக் கிண்ண உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

மர்ஹும் எம்.ஏ.நஸீர் ஞாபகார்த்தக் கிண்ண உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில்... அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அல்-அர்ஹம் வித்தியாலய அணிகள் வெற்றி



(ஆதம்)


பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மர்ஹும் எம்.ஏ.நஸீர் ஞாபகார்த்தக் கிண்ண உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 13 வயது பிரிவில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை A அணியும், 15 வயதுப் பிரிவில் அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலய அணியும் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசினையும் சுவீகரித்துக்கொண்டது.

குறித்த உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் சனிக்கிழமை (03) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டியானது இரு வயது அடிப்படையில் இடம்பெற்றது. இதன்போது 13 வயது பிரிவில் இடம்பெற்ற போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை A அணியினர் முதலாமிடத்தினையும், அக்கரைப்பற்று பேபிள்ஸ் அகடமி அணியினர் இரண்டாமிடத்தினையும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை B அணியினர் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

15 வயதுப் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலய அணியினர் முதலாமிடத்தினையும், 
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியினர் இரண்டாமிடத்தினையும் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய அணியினர் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் பதக்கங்களும் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ் பிரதம அதிதியாகவும், பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.எஸ்.பாத்திமா கௌரவ அதிதியாகவும் அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.







 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment