சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த டொக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கர் சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
டொக்டர் பிரபாசங்கர் நேற்று (06) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அறிக்கை செய்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் கடந்த இரண்டு வருட காலமாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் நிர்வாக முதுவிஞ்ஞானமாணி பயிற்சி நெறியை மேற்கொண்டிருந்தார். இரு வருடகால பயிற்சியை முடித்த 23 பேருக்கு நாட்டிலுள்ள பெரும் வைத்தியசாலைகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
டொக்டர் பிரபாசங்கர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளதுடன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் காத்தான்குடி கொரோனா வைத்தியசாலை பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.


0 comments:
Post a Comment