பிரதான செய்திகள்

ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்பில்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது

றிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறதுராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பத்தரமுல்ல  பகுதியில்  உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (10) இடம்பெற்ற தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு காரியாலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.எமது வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவார். சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும்மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அவர்கள் அறிவித்து விட்டார்கள்.

முன்னறிவிப்புக்களை விடுப்பதால் மாத்திரம் தேர்தலில் வெற்றிப் பெற முடியாது. அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்கமாட்டார்கள்வன்முறையான அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுப்பட்டுஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்துள்ளோம் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இவர்களின் உண்மை முகம் அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது. அழிப்பதும்,தீ வைப்பதும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கையாகும்2022 ஆம் ஆண்டு சம்பவத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டது என எதிர்த்தரப்பினர் கருதுகின்றனர். அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்றார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment