பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கதிரைகள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறும் அவ்வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் குறித்த பிரச்சினையை உடனடியாகத் தீர்த்துவைக்கும் பொருட்டு சனிக்கிழமை (11) பெருமதிமிக்க 30 கதிரைகளை வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment