பிரதான செய்திகள்

வீடுகளில் பாவிப்பது போன்று நீரை சிக்கனமாகப் பாவிப்போம்

தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நீர் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (31)  பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நீரினை பயன்படுத்தும் இடங்களில் " எமது வீடுகளில் பாவிப்பது போன்று நீரை சிக்கனமாகப் பாவிப்போம்” எனும் அறிவுறுத்தல் Sticker ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் நீரினைப் பயன்படுத்தும் இடங்களில் உள்ள நீரிணைப்புக்களில் ஒழுக்குகள் கசிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அவற்றினை சீர்செய்கின்ற பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

 

கல்முனைப் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் .எஸ்.எம்.பௌசாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் உள்ளிட்ட பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியல்கள் பலரும் கலந்துகொண்டனர்.







 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment