பிரதான செய்திகள்

(D-100) வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பணம்: உள்ளக வீதிகளுக்கு காபட் இடும் பணிகள் ஆரம்பம்

(நூருல் ஹுதா உமர்)

 

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் (D-100) 100 நாள் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியாக புகழ்பெற்ற கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளின் அதிக பாவனையில் உள்ள உள்ளக பாதைகளை காபட் பாதையாக மாற்றும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

குறித்த 100 நாள் வேலைத்திட்டத்தின் தொடக்க விழா இன்று (30) கல்லூரியின் அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காபட் இடும் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை, கல்முனை மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸிம், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அலியார், அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.அஸ்மீர், கல்முனை மாநகர பொறியியலாளர் எம். அப்துல் ஹலீம் ஜௌசி, கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹுபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

குறித்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு கல்லூரிக்கு நிதி ஒதுக்கிட்டினை செய்தமைக்காகவும், மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதை கௌரவிக்கும் விதமாகவும் பிரதம அதிதிக்கும், கல்லூரியின் அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் அண்மையில் வெளியாகிய இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - II பதவியுயர்வு பெற்றமையினை பாராட்டியும் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி இந்நிகழ்வின் போது கெளரவிக்கப்பட்டது.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment