பிரதான செய்திகள்

மொட்டுக் கட்சியில் பயணித்தவர் ACMC கட்சியில் இணைந்துகொண்டார்

முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் இன்று (31) உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

 

றிஸ்லி முஸ்தபாஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்ளும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விழா  மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம், வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் றிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி .எல்.எம்.ஐயூப்கானின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்), முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்..எம்.மாஹிர் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உயர் பீட உறுப்பினர்கள், உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள் மாற்றும் றிஸ்லி முஸ்தபாவின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட இளைஞர் காரியாலயம் றிஸ்லி முஸ்தபாவின் கல்முனை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

 




 


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment