(அஹமட்)
அந்த வகையில் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள கிளைக் குழுக்களை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றது.
மக்கள் காங்கிஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும்,
தொழிலதிபருமான ஏ.கே.அமீரின் வேண்டுகோளின் பிரகாரம், தைக்காநகர் வட்டாரக் கிளையினை புனரமைப்பு
செய்யும் வகையில் தைக்கா நகர் வட்டார அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான
ஐ.எல்.றபீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் வெள்ளிக்கிழமை
(17) மத்திய குழுவின் தலைவர் ஏ.எச்.ஹம்சா தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது அட்டாளைச்சேனை -15, அட்டாளைச்சேனை -16 ஆகிய
பிரிவுகளை சேர்ந்த கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது
கட்சியின் கிளைக்குழுக்கள் புனரமைக்கப்பட்டு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு
நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கட்சியின் பிரதி செயலாளர் நாயகமும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்
தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ அன்சில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.றியாஸ், மத்திய குழுவின் செயலாளர் ஏ.எம்.இர்பான், மத்திய குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஆசிரியர்
எம்.ஏ.பௌஸ், மற்றும் ஆசிரியர் எம்.ஐ. ஹாபீல்
உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment