சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மிக அவசியத் தேவையாக காணப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வழங்கி வைத்தார்.
அண்மையில்
அவ்வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலையின்
அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியதுடன், அங்கு நிலவும் தேவைகள் குறைபாடுகள்
குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத்
தொடர்ந்து பிராந்திய பணிப்பாளர் பதில் வைத்திய அத்தியட்சகரும், மகப்பேற்று வைத்திய
நிபுணருமான டொக்டர் எல்.சி.ஆர்.றொஹான் அவர்களிடம் மருத்துவ உபகரணங்கள் மற்றும்
அலுவலகத் தளபாடங்களையும் கையளித்தார்.
இந்நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் என்.அகிலன், பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.ஷாபி,
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.நியாஸ் அஹமட், வைத்தியசாலை
அபிவிருத்திக்குழுவின் தலைவர் டொக்டர் ஏ.இஸ்ஸடீன் உள்ளிட்ட வைத்தியர்கள்,
வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.




0 comments:
Post a Comment