கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு பிரதிப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்
நீண்ட காலமாக நிரந்தர பிரதி பணிப்பாளர் இன்றி செயல்பட்டு வந்த மேற்படி அலுவலகத்திற்கு நிரந்தர மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விலங்கியல் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஹாதி அலுவலகத்திற்கு விஜயம் செய்த போது அவருக்கு அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்களினாலும். ஊழியர்களினாலும் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது .
அதன்பின்னர் விலங்கியல் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஹாதி தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

0 comments:
Post a Comment