குறித்த செயற்திட்டங்களை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு (7) பாடசாலை அதிபர் திருமதி எஸ். சோபியா தருமதாஸ தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் கலாநிதி எம்.எஸ். அப்துல் வாசித், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.ஜமாஹிம், என்.தசிதரன் கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.கங்காதரன், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன் மருத்துவருமான இஸட்.எம் .ஹாஜித், அமைப்பாளர் ஐ.அப்துல்லா, உப தலைவர் எம்.எஸ்.ஏ.நாசர், பொருளாலர் ஏ.ஜீ.அமிர் அலி, உபசெயலாளர் எம்.எச்.ஏ.சுபுஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் வருடாந்தம் நடாத்தும் அறுகம்பே சர்வதேச அரை மரதன் நிகழ்வினூடாக திரட்டப்படும் நிதியிலிருந்து இன, மதம், வேறுபாடுகளுக்கப்பால் பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு செற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் உல்லை சிங்கபுர சிங்கள வித்தியாலயத்தில் நீர் விநியோகத் திட்டம் மற்றும் அல் - அக்ஸா வித்தியாலயத்தின் ஆராதனை மண்டப புனர்நிர்மானம் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment