ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாலர்கள் பலர் சனிக்கிழமை (8) தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.
தேசிய காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (8) பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவர் அதாஉல்லா முன்னிலையில் குறித்த ஆதரவாலர்கள் இணைந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.முபாரக், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டு அந்தக் கட்சியிலே இணைந்துகொண்டு அனைத்து விடயங்களிலும் இணைந்த அரசியலை செய்வதற்கு திடசங்கர்ப்பம் பூண்டுள்ளேன். பொத்துவில் பிரதேசம் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசமாகும். இந்தப் பிரதேசத்திலேதான் அதிகமான பிரச்சினைகள் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்தப் பிரதேசத்திலே இருக்கின்ற பிரச்சினைகளையும், தேவைகளையும் இனங்கன்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அந்த அடிப்படையில் நான் அங்கத்துவம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன்.
எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவில்லாத அல்லது முடிவைச்சொல்லாத கட்சியாகவும் பொடுபோக்குத் தனமாக இருக்கின்ற ஒரு கட்சியாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது. பொத்துவில் பிரதேசத்தில் கல்விப் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை என்பற்றுக்கு அப்பால் காணிப் பிரச்சினை காணப்படுகிறது. இந்த பிரதேசத்தினுடைய இருப்பே அந்த காணிகளிலே தான் தங்கியுள்ளது. எங்களது பிரதேச காணிகளை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு எமது அரசியல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
எமது அரசியல் பொருத்தமற்றவை என்பதனால்தான் இந்தப் பிரதேசத்தினுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனது. எமது பிரதேச அரசியலை அரசாங்கத்திற்கு எதிரான அரசியலாக நாம் முன்னெடுக்கின்ற போது அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் போனது. எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொருத்தமான அரசியல் முகாம் எதுவாக இருக்கும் என்று சிந்தித்த போதுதான் பொருத்துமான அரசியலை விட்டுவிட்டு இதுவரை காலமும் வெளியில் இருந்துவிட்டோம் என கவலைப்படுகின்றோம்.
அந்தவகையில், தேசிய காங்கிரசினுடைய தலைவரை பொத்துவில் பிரதேசத்தினுடைய காவலனாக அரசியல் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு எமது பிரச்சினைகளை தீர்க்ககூடிய ஒரு அரசியல் பயணத்தில் இணைந்து கொள்கின்றேன் என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியின் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளர் எம்.எம்.தமீம் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மக்களை மன்டியிட வைப்பேன் என முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் கூறிய போது, நான் கொதித்தெழுந்தேன். அந்த நிமிடம் கிழக்கு மாகாணத்தில் உதித்த ஒரு கட்சிக்காக உழைக்க ஏன் தயங்க வேண்டும் என்ற என்னத்தை வளர்த்தேன்.
பொத்துவில் பிரதேசம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை சகல கட்சித்தலைவர்களிடமும் முறையிட்டிருக்கின்றேன். ஆனால் அவர்கள் கொடுத்ததெல்லாம சட்டியும், பானையும்தான். அதன் காரணமாகத்தாக் அந்தக் கட்சிகளை எனக்குப் பிடிக்கவில்லை.
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளும், ஏனைய கட்சிகளும் பொறாமைத்தனமாகவும், நயவஞ்சகத் தனமாகவும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவை இங்குள்ள சிறுபிள்ளைகளிடம் நஞ்சூட்டி வளர்த்திருக்கிறார்கள். அதற்கு எதிரான மருந்தாக எமது வார்த்தைகளின் ஊடாக நாம் பதிலளிப்பதற்கு தயாராகவுள்ளோம்.
நான் தேசிய காங்கிரசில் ஏன் இணைந்துகொண்டேன் என பல விமர்சன அம்புகள் எனது முதுகிலும் மார்பிலும் குத்தப்படும். ஆனால் அதற்கு கவசமாக எனது நேர்மை இருக்கிறது. அந்த நேர்மைக்கு எவரும் ஈடுகொடுக்க முடியாது.
தாராபுறத்திலும், கலகெதரவிலும் இருப்பவர்களிடம் மன்டியிட்டு, எமது சமூகத்தை காட்டிக்கொடுத்த காலங்கள் இன்றோடு முடிவு பெறுகிறது பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தேசிய காங்கிரசின் ஊடாக மாத்திரமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

0 comments:
Post a Comment