கொத்மலை, பகுதியில் இன்று (9) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன் ஆகியோர் எமது அணியுடன் சங்கமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டு நாட்டை நேசிக்கும் கூட்டணியை அமைத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்படும். ஜனாதிபதி தேர்தலின் போது கிடைத்த பெறுபேறுகளில் அடிப்படையில் பொதுத்தேர்தலில் எமது அணியால் 129 ஆசனங்களைக் கைப்பற்ற முடியும்.
தேசியப்பட்டியல் ஊடாகவே ஜே.வி.பிக்கு ஓர் ஆசனம் கிடைக்கும். மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திகாம்பரத்தின் கட்சி, மனோ கணேசனின் கட்சி, ரிஷாத்தின் கட்சி, ஹக்கீமின் கட்சி ஆகியவற்றுக்கு 95 ஆசனங்களே கிடைக்கும். இந்நிலையில் நுவரெலியா, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஆசன எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்காகவே பஸில் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் நுவரெலியாவுக்கு வந்துள்ளேன்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் களம் புகுந்துள்ளேன். செத்து மடியும் வரை இங்கேயே அரசியல் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட மக்களை விட்டு விட்டு இனி எங்கும் செல்லமாட்டேன். அமைச்சர் தொண்டமான், சதாசிவம் ஆகியோர் எமது அணியில் உள்ளனர். மலையக மக்கள் முன்னணியை தற்போது வழி நடத்தும் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் ஆகியோர் எம்முடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார்.

0 comments:
Post a Comment