கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாம், மூன்றாம் நிலை அரசியல் தலைவர்கள் தேசிய காங்கிரசுடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் என தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (8) பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரசில் நாங்கள் இருந்த போது எங்களுடன் பயணித்தவர்களுடனான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பலருடைய கொள்கைகளும், பலருடைய அரசியல் விடயங்களும் பக்கத்தில் இருந்துகொண்டு பார்க்கும் போதுதான் தெளிவாகப் புரியவரும். அதன் அடிப்படையில் எமது இளைஞர் சமூகம் சரியாக புடம்போடப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இப்போது எங்களுடன் இணைய முன்வந்துனர்.
தேசிய காங்கிரசின் ஆளுமையை அறிந்து இப்போது எம்மோடு பலர் இணைந்துள்னர். இவர்களே தேசிய காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைப்பார்கள். இந்த மக்களை ஏமாற்றியவர்கள் பற்றி பேசுவதற்க்கு இனி நான் தேவையில்லை. இவர்களே போதுமானவர்கள் என்றார்.
இந்த ஊடக சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாலர்கள் பலர் தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment