கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில் வீதி ஓட்ட நிகழ்வு (அரை மரதன்) அண்மையில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி போட்டி நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் பாடசாலைகள் கட்டிட பொறியியலாளருமான ஏ.ஜே.எம்.ஜவ்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், கல்லூரின் விளையாட்டுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வீதி ஓட்ட நிகழ்வில் அரபா இல்லத்தைச் சேர்ந்த எம்.ரஸா முஹம்மட் முதலாவது இடத்தையும் , ஹிரா இல்லத்தைச் சேர்ந்த எம்.ரீ.எம்.ரஜா இரண்டாம் இடத்தையும் சபா இல்லத்தைச் சேர்ந்த என்.சாபித் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், மேற்படி தூரத்தை இறுதிவரை ஓடி முடித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான இவ்வீதியோட்டம் ஸாஹிராக்கல்லூரி வீதி, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாக சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய முன்றலை சென்றடைந்து மீண்டும் மட்டக்களப்பு - கல்முனை வீதி வழியாக கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளி வரை சென்று மீண்டும் பிரதான வீதி, ஸாஹிராக் கல்லூரி வீதி வழியாக கல்லூரி மைதானத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment