அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தங்களை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த இரத்ததான முகாம் அன்றைய தினம் காலை 8.30மணி முதல் பிற்பகல் 3.30மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் ஏ.எச்.எம்.சிபாஸ் தெரிவித்தார்.
குறித்த இரத்ததான முகாமில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் கலந்துகொண்டு இரத்தம் தானம் செய்ய முடியும் எனவும், அதற்கான சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இரத்ததானம் செய்வதற்கு ஆர்வமள்ளோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
உயிர் காக்கும் உன்னதப் பணியாகவும், இனங்களுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்தி இன,மத, வேறுபாடுகளைக் கடந்து மனிதத்துவத்தை வாழ வைக்கும் நற்பணியாகவும் கருதி அக்கரைப்பற்று தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் இயங்கிரும் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகம் வருடா வருடம் இவ்வாறான இரத்த தான நிகழ்வுகளை நடாத்தி வருவதாகவும். இரத்தக் கொடை வழங்கி பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் இயங்கிரும் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தின் 11வது இரத்ததான முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment