இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் புதிய சீருடையினை கழக வீரா்களுக்கு வழங்கி அறிமுகம் செய்து வைத்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன், கழகத்தின் ஸ்தாபகத்தலைவர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், கழகத்தின் செயலாளர் எம்.றிபா, பொருளாலர் என்.எம்.மபா உட்பட கழகத்தி்ன் உறுப்பினர்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நஸீரின் 50ஆயிரம் ரூபா நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment