கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால் கிழக்கு மகாண சபை முன்னாள் உறுப்பினரும், கலைஞருமான கே.எம்.அப்துல் ரசாக் (ஜவாத்) "சுவதம் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையினர் நேரடியாக அவரின் இல்லம் சென்று (26) அவ்விருதினை வழங்கி கௌரவித்தனர்.
கலாசார அதிகார சபையின் பொருளாளர், ஏ.ஆர்.எம்.சாலிஹ், செயலாளர், எஸ்.எல்.அப்துல் அஸில், பிரதி செயலாளர் பஸிர் அப்துல் கையூம், மற்றும் கல்முனைபிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பெளசூல் ஹிபானா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment