பொத்துவில் ஆதார வைத்தியசாலையினை மத்திய அரசாங்கத்தின் கீழ் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான முயற்சிகளில் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் முதற்கட்டமாக குறித்த வைத்தியசாலையினை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்வதற்குரிய திட்ட வரைவு இடம்பெற்று வருகின்றது. இதற்கான மொத்த செலவினை அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த வரைவுக்குரிய நிதியினை கையளிக்கும் நிகழ்வு இன்று (6) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன் போது அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன் மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையிலான குழுவினர் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எம்.எம்.சமீமிடம் நிதியினை கையளித்தனர்.
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம், அமைப்பாளர் ஐ.அப்துல்லா, உப தலைவர் எம்.எஸ்.ஏ.நாசர், உபசெயலாளர் எம்.எச்.ஏ.சுபுஹான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் மருந்தாளர் எம்.ஏ.ஏ.றபாயுல், முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.கியாஸ்டீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment