பொத்துவில் பிரதேசத்தில் சமூக சேவை மற்றும் கல்வித் துறையில் பல்வேறு அர்ப்பணிப்புக்களைச் செய்த பலர் தேசிய காங்கிரசின் பொத்துவில் மத்திய குழுவினால் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மண்ணுக்கு மகிமை சேர்த்த பொக்கிஷங்களுக்கு ”உயர்ந்த மண் விருது” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08) பி.ப.4மணிக்கு அறுகம்பே புளுவெவே ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
தேசிய காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
அண்மையில் கலாநிதிப் பட்டம் பெற்று பொத்துவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த சமூக சேவையாளர் கலாநிதி ஏ.எம்.நஸ்வுதீன் உள்ளிட்ட சமூக சேவை மற்றும் கல்வித் துறையில் பல்வேறு அர்ப்பணிப்புக்களைச் செய்த மூன்று பேர் இந்நிகழ்வின் போது ”உயர்ந்த மண் விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக சேவையாளர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர் தேசிய காங்கிரசிஸ் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment