பொத்துவில் பிரதேசத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களான கலாநிதி ஏ.எம்.நஸ்றுதீன் மற்றும் எஸ்.எச்.எம்.முஸ்தபா ஆகியோர் தேசிய காங்கிரசின் பொத்துவில் மத்திய குழுவினால் ”உயர்ந்த மண் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
”உயர்ந்த மண் விருது” வழங்கும் விழா தேசிய காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் சனிக்கிழமை (08) அறுகம்பே புளுவெவே ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஜமாஹிம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரிய ஆலோசகருமான எம்.எஸ்.எம்.முபாரக், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.சியா, முனை மருதவன் எம்.எச்.எம்.இப்றாகீம் மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக சேவையாளர்கள், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அமெரிக்கன் குளோபல் பீஸ் பல்கலைக்கழகத்தினால் அண்மையில் கலாநிதிப் பட்டம் பெற்று பொத்துவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த சமூக சேவையாளர் கலாநிதி ஏ.எம்.நஸ்றுதீன் இந்நிகழ்வின் போது பொத்துவில் பிரதேச பொது அமைப்புக்கள், கல்வியலாளர்களினாலும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment