பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவ சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் திங்கட்கிழமை (9) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எஸ்.கோனேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளரும், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.ஏ.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கற்றல் வள நிலையத்தினை திறந்து வைத்தார்.
இதன்போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment