பிரதான செய்திகள்

வெளிநாட்டவர்கள் இணைந்து அறுகம்பை பிரதேசத்தில் சிரமதானம்

பொத்துவில்,அறுகம்பை,பானம ஆகிய பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் முறையாகப் பேணப்படாது பொத்துவில் பானம பிரதான வீதி காட்டுப்பகுதிகளில் கொட்டப்படுவதனால் சுற்றாடல் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதிகளில்  உள்ள மிருகங்களும் பறவைகளும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை உண்டு இறக்கின்றன.

இதில் அதிகமாக காட்டு யானைகள் பாதிக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற அறுகம்பை பிரதேசத்தையும் அதனை அண்டிய பகுதிகளின் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு  அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிரமதானப் பணியை ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்போம் மிருகங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்சிரமதான  நிகழ்வு  பொத்துவில் பிரதேச சபை இலங்கை இராணுவத்தினர், படற்படையினர் பொது அமைப்புக்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இச்சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

சுற்றாடைலை மாசுப்படுத்தும் இவ்வாறான செய்பாடுகளை தடுக்கும் நேர்க்கிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் பொத்துவில் பானம பிரதான வீதியின் காட்டுப்பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நோக்குடனேயே இவ்விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியமானது பிராந்தியத்தின் கல்வி விளையாட்டு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சுற்றுலாத்துறை போன்றவற்றில் மேம்பாட்டுக்கான பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை விசேட அம்சமாகும்.






 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment