அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட (kids Athletic) சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையில் அக்கோட்டப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை (kids Athletic) தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறித்த பயிற்சி செயலமர்வுவொன்று சனிக்கிழமை (24) அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை (kids Athletic) இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ், ஆசிரியர்களான ஏ.எல்.அஜ்மல், ஜே.பஸ்மிர் ஆகியோர் பயிற்சியினை வழங்கினர்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டத்தில் உள்ள 15பாடசாலைகளில் இருந்தும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment