பிரதான செய்திகள்

சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியின் ஏனைய பகுதிகளுக்கும் மின் விளக்குகள்: அமைப்பாளர் ஹசன் அலி

(றியாஸ் ஆதம்)

சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதி பூராகவும் நவீன தெரு மின் விளக்குகளை பொருத்துமாறும், அவ்வீதியினால் பயணிப்போர் எதிர்நோக்குகின்ற இன்னல்களை தீர்க்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளரும், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அம்பாரை கல்முனை பிரதான வீதியில் காரைதீவு சந்தியிலிருந்து மாவடிப்பள்ளி பாலம் வரையிலான பகுதிகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நவீன தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வீதியின் ஏனைய பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் குறித்த வீதியின் பெரும்பகுதியானது இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

அவ்வீதியின் இருள் சூழ்ந்த பகுதிகளில் கால்நடைகள் மற்றும்  யானைகளின் நடமாட்டங்கள் தினமும் அதிகரித்துக் காணப்படுவதுடன், குறிப்பாக யானைகளின் நடமாட்டங்கள் இரவு நேரங்களிலே அதிகமாகக் காணப்படுகிறது. அத்துடன் அப்பகுதியில் அதிகமான வீதி விபத்துக்களும் இடம்பெறுகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே அவ்வீதியினால் பிரயாணம் செய் வேண்டியுள்ளது.

அம்பாரை மற்றும் கல்முனை நகரங்களுக்கு செல்வோரும், இதர பிரதேசங்களில் இருந்து சம்மாந்துறைக்கு வருகை தருவோரும் குறித்த வுதியினால்பயணம் செய்வதனால் நாளாந்தம் பயணிப்போரின் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் அவ்வீதியின் தற்போதைய நிலையினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேற்படி விடயமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து, குறித்த வீதியினால் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து விடுபடுவதற்கு மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பிரதான வீதி பூராகவும் தெரு மின் விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளரை தொடர்புகொண்டு குறித்த வீதியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பனிப்புரை விடுத்தார்.

அத்துடன், கல்முனை அம்பாரை பிரதான வீதியின் காரைதீவு சந்தியிலிருந்து விழுனையடி சந்தி வரைக்கும் வீதியினை அழகு படுத்தும் வகையில் வீதியின் இருமருங்கிலும் நிழல் மரங்களை நடுமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பனிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மரநடுகை வேலைத்திட்டம் எதிர்ரும் டிசம்பர் மாதத்திற்குள் இடம்பெறவுள்ளதாகவும், குறித்த சில தினங்களில் தெரு மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment