ஏறாவூர் பிரதேசத்தின் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு பாரிய இடையூறுகள் ஏற்படுவதுடன் பல்வேறு விபத்துகளும் நிகழ்கின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு ஏறாவூர் நகர சபை விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து கால்நடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொது இடங்களில் கால்நடைகளின் நடமாட்டமானது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதனால், இதனை அவற்றின் உரிமையாளர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

0 comments:
Post a Comment