ஒலுவில் துறைமுக வடக்கு வீதியை திறக்குமாறு கோரி ஒலுவில் துறைமுக நுழைவாயிலுக்கு முன்னால் இன்று (25) புதன் கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டம் ஒலுவில் வடக்கு கரையோர கரைவலைப் பிரதேசத்திலுள்ள நுழைவாயிலின் முன்னால் இடம்பெற்றது.
ஒலுவில் துறைமுகத்திற்கு மூன்று பிரதான நுழைவாயில்கள் உள்ளன. அதில் தெற்குப் புறத்திலுள்ள நுழைவாயில் மட்டுமே மீனவர்களும் பொது மக்களும் பயன்படுத்துவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு சுமார் மூன்று கிலோ மீற்றர் சுற்றியே ஒலுவில் மீனவர்கள் செல்லவேண்டும். இதேவேளை ஒலுவில் பொதுமக்களும் மீனவர்களும் நேரடியாக துறைமுகத்திற்கு செல்லக்கூடிய வடக்குப் பாதை மூடப்பட்டுள்ளது. இதனை திறக்கச் சொல்லியே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒலுவில் மீனவர்களின் நன்மை கருதி துறைமுகத்தின் வடக்குப் பாதையை திறக்குமாறும், ஒலுவில் துறைமுகத்தை துஷ்பிரயோகம் செய்யாதே என்றும், அரசே ஒலுவில் மீனவர்களுக்கு வளிதிற, மீனவர்கள் இருப்பது எந்கோ? பாதை இருப்பது எங்கோ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் ஒலுவில் பொதுமக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் பொதுமக்கள், மீனவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




0 comments:
Post a Comment