ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்), அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
யூ.கே.ஆதம்லெப்பை, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பதுடன், இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment