மேற்படி சபை அமர்வு தொடர்பில் சகல உறுப்பினர்களுக்குமான அழைப்பினை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பாயிஸ் விடுத்துள்ளார்.
குறித்த தினம் நடைபெறவுள்ள அமர்வின் போது கடந்த மாத கூட்டறிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறல், செலவீனங்களுக்கு அங்கீகாரம் பெறல், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை கடற்கரை பூங்காக்களில் கட்டண அறவீடுகளை மேற்கொள்ளல் என பல விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள், முறைப்பாடுகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள் தொடர்பாகவும் குறித்த அமர்வின் போது ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment