பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் தளபாட பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

குறித்த பாடசாலையில் நிலவும் தளபாடப்பற்றாக்குறையினை உடனடியாக நிவர்த்தி செய்துதருமாறும் அவர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். மேற்படி விடயத்தினை கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மாக்கான் மாக்கார் வித்தியாலயத்திற்கு தளபாடத்தினை கொள்வனவு செய்வதற்காக முதற்கட்டமாக இரண்டு லட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளார்.

 குறித்த நிதியினை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.ஐ. றசாக்கிடம் அதற்கான காசோலையினை கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேயவர்த்தன, ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.சாஜித், ஓய்வு பெற்ற அதிபர் எம்.எஸ். அபுல் ஹஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment