பிரதான செய்திகள்

அந்-நூரியன்ஸ் கிரிக்கட் கானிவேல்: 2012 O/L பழைய மாணவ அணியினர் வெற்றி

(ஏ.எல்.றியாஸ்)

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட அந்-நூரியன்ஸ் கிரிக்கட் கானிவேல் - 2018 கிரிக்கட் போட்டியில் 2012 O/L பழைய மாணவர் அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் வகையில் அப்பாடசாலையின் 2006 O/L பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்ட அந்-நூரியன்ஸ் கிரிக்கட் கானிவேல் - 2018 கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (14) அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் 2012 மற்றும் 2015ஆம் வருட O/L பழைய மாணவ அணியினர் மோதிக்கொண்டனர். இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற நாணயச் சுழற்சியில் 2012ஆம் வருட O/L பழைய மாணவ அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர். அதற்கினங்க முதலில் துடுப்பெடுத்தாடிய 2015ஆம் வருட O/L பழைய மாணவ அணியினர் 4.3ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 51ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். அந்த அணி சார்பாக நதீர் 18ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சியில் நப்ராஸ் ஒரு ஓவர் பந்து வீசி 8ஓட்டங்களை கொடுத்து 3விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

52ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 2012ஆம் வருட O/L பழைய மாணவ அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்கள் நிறைவில் 2விக்கட்டுக்களை இழந்து 52ஓட்டங்களை பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர். அந்த அணி சார்பாக அர்சாத் ஆட்டமிழக்காது 31ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சியில் சஜீத் ஒரு ஓவர் பந்து வீசி 3ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கட்டினை கைப்பற்றினார். அதற்கினங்க இப்போட்டியில் 2012ஆம் வருட O/L பழைய மாணவ அணியினர் 3விக்கட்டுக்களினால் வெற்றியீட்டினர். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அர்சாாத் தெரிவு செய்யப்பட்டார்.

அணிக்கு 8பேர் 5ஓவர்கள் கொண்ட இம்மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 13அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன், அந்-நூர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினரும், பிரதி அதிபருமான எஸ்.எம்.எம். ஹனீபா, அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதி அதிபர் எம்.எச்.எம். றமீஸ், ஆகியோர் அதிதிகளாக கலந்துசிறப்பித்தனர்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment