பிரதான செய்திகள்

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதே எமது பிரதான இலக்கு: விமல் வீரவன்ச MP

பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை தம்வசப்­ப­டுத்தி ஆட்சியைக் கைப்­பற்றும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலை­வ­ராக்­கு­வதே எமது பிர­தான இலக்­காகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்குள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்­கவும் நாட்டைத் துண்­டா­டவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும்  முன்­னெ­டுக்கும் நோக்­கங்கள் எமக்கு நன்­றா­கவே தெரி­கின்­றன. எனவே நாட்டைக் காப்­பாற்ற வேண்­டிய தேவை எமக்குள்­ளது. 

கடந்த ஜன­தி­பதித் தேர்­தலின்  பின்னர் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்ளார். ஆகவே இது போது­மா­னது. இன்று தேசிய பாது­காப்பு விட­யத்தில் பாரிய அச்­சு­றுத்தல் உள்­ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்கும் சூழல் உள்­ளது. வடக்கு முதல்வர் நாட்­டைத் துண்­டாடும் நோக்­கத்தில் செயற்­பட்டு வரு­கிறார். சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்கள் பிரி­வி­னை­வாதக் கொள்­கையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். பொலிஸ் அதி­கா­ரங்கள், காணி அதி­கா­ரங்­களை கேட்­டுக்­கொண்டு  அவர்கள் வடக்கில் மீண்டும் தனி ராஜ்ஜி­ய­மாக செயற்­பட முயற்­சித்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் நோக்­கங்கள் மூல­மாக விடு­த­லைப்­பு­லி­களின் இலக்கு என்­னவோ அது அர­சாங்­கத்தின் மூல­மா­கவே நிறை­வேற்­றப்­படும். ஆகவே 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிப்­பது குறித்து சகல தரப்­புகளு­டனும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான எதிர்க்­கட்சி ஆச­னத்தை நாம் கைப்­பற்ற வேண்டும். அந்த நோக்கம் எமக்குள்­ளது. குறிப்­பாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி முடி­வுக்கு வரும் வரையில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்­டு­வர வேண்டும். அதற்­கான சூழலை நாம் உரு­வாக்­கு­வது குறித்தும் சிந்­தித்து வரு­கின்றோம்.

இப்­போது அர­சாங்­கத்தில் இருந்து பலர் வெளி­யேறி எதிர்க்­கட்­சிக்கு  மாறி­யுள்­ளனர். ஆகவே இப்­போது கூட்டு எதிர்க்­கட்சி பிர­தான எதிர்க்­கட்­சி­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாற்றும் நகர்­வு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும் என்றார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment