பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் ஆலோசகரே என்னை அச்சுறுத்துகிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே தன்னை அச்சுறுத்தி வருவதாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூகவலைத்தளங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. எனது பாதுகாப்பை  அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது,

எனக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்குப் பின்னால், ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரின் முகநூலில் எனக்கு எதிரான பதிவுகளை காணமுடியும்.

மேலும் எனது கணவர் விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறான எந்தவிதமான தொடர்புகளும் அவருக்கு இல்லை. இவ்வாறான போலியான பரப்புரைகளை செய்து பிரகீத் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கப் பார்க்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment