வீடமைப்பு மற்றும் நிரமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவன தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகிறது.
ஏறாவூர் மிச்நகர் ஸம்ஸம் மற்றும் ஸக்காத் பிரதேசத்தில் மேற்படி திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வீடுகளை மக்களிடம் கையளித்தார்.
இதன்போது கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிர், ஏறாவஸ்ரீர் நகர சபை தவிசாளர் பாசித் அலி, ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழா நிகழ்வில் அரச அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஸம் ஸம் கிராமம், ஸகாத் கிராமம் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் 43 புதிய வீடுகளும், உட்கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சார வசதிகள், உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.





0 comments:
Post a Comment